சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோர் விகிதம் 60 சதவீதமாக உயர்வு

0 680

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோர் விகிதம் 60 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

15 மண்டலங்களிலும் 55,969 பேர் பாதித்த நிலையில், அதில் 33,441 பேர் குணமாகி விட்டதாகவும், 846 பேர் பலியாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, 21 ஆயிரத்து 681 பேர்  சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5 ஆயிரத்து 534 பேரும், தண்டையார்பேட்டையில் 4,647 பேரும் குணமாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோர் விகிதம் 60 சதவீதமாக உள்ள நிலையில், பலியானோரின் விகிதம் 1.51 சதவீதமாக இருப்பதாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 39 சதவீதமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 2,946 பேர் சிகிச்சை பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments