ரேசன் கடையில் 120 கிலோ அரிசி, 160 கிலோ கோதுமை! லாக்டௌனால் வேலை இழந்த யானைகள் திருப்தி

0 4974

கேரளாவில் யானைகள் வளர்ப்போர் அதிகம். அங்கு, நடைபெறும் கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள் என எந்த நிகழ்வாக இருந்தாலும் யானைகள் கண்டிப்பாக பங்கேற்கும். பல குடும்பங்கள் யானைகளை வைத்து அங்கே பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கொரோனா லாக்டௌன் காரணமாக கோயில் விழாக்கள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளும் கேரளாவில் நடக்கவில்லை. யானைகள் முக்கியமாகப் பங்கேற்கும் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கூட ரத்து செய்யப்பட்டது. இதனால், யானைகள் வளர்ப்போர் வருவாய் இல்லாமல் கஷ்டப்பட்டனர். தாங்கள் வளர்த்து வரும் யானைகளுக்கு சரிவர உணவு அளிக்க முடியாமல் திணறினர்.

இதையடுத்து, கேரள அரசு யானைகளுக்கு ரேசன் பொருள்களை வழங்க முடிவு செய்தது. யானைகளை வைத்திருப்போர் அதை கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று அவற்றுக்குரிய ரேசன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கேரள அரசு அறிவித்தது. தொடர்ந்து, ஏராளமான யானைகள் ரேசன் கடைகளுக்கு வந்து தங்ளுக்குத் தேவையான ரேசன் பொருள்களை அமைதியாக பெற்று சென்றன. ஒவ்வொரு யானைக்கும் 40 நாள்களுக்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. அதில், 120 கிலோ அரிசி 160 கிலோ கோதுமை 120 கிலோ திணை, 20 கிலோ பச்சை பயறு, 20 கிலோ குதிரை வாலி, 6 கிலோ கருப்புக்கட்டி மற்றும் உப்பு, மஞ்சள் ஆகியவை யானைகளுக்கு ரேசன் பொருள்களாக வழங்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16,000 ஆகும்.

லாக்டௌனால் வேலை இழந்த யானைகளுக்கும் ரேசன் பொருள்கள் வழங்கப்பட்டதால், கேரளாவில் யானை வளர்ப்போம் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments