டெல்லி முழுவதும் வீடு வீடாக ஆய்வு

0 526

டெல்லியில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளும் பணி, ஜூலை 6ம் தேதிக்குள் முடிவடையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை சுமார் 3 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் பரிசோதனை பணிகள் முடிவடைந்ததும், டெல்லி முழுவதும் வீடு வீடாக சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments