சுமார் 1,500 மருத்துவ பணியாளர்கள் இன்றுடன் பணி ஓய்வு

0 3127

தமிழகம் முழுவதும் பணிக்காலம் முடிந்து சுமார் ஆயிரத்து500 மருத்துவ பணியாளர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  மருத்துவ பணியாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள்,  செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத காலம் பணி நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதையடுத்து, பணி ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள்,  செவிலியர்கள் அனைவரும் அதே பணியில் அந்தந்த மருத்துவமனைகளில் தொடர்ந்து நீடித்து வந்தன.இதையடுத்து அரசு அறிவித்தபடி மூன்று மாதம் பணிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், சுமார் 1500 மருத்துவ பணியாளர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments