ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 2649

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அனந்த்நாக்கிலுள்ள வாகமா பிஜ்பெரஹா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு இன்று காலை தேடுதல் வேட்டை நடத்தியபோது, இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் 2 பேரும் அண்மையில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரையும் 5 வயது சிறுவனையும் சுட்டுக் கொன்றவர்கள் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments