இந்தியாவில் 24 மணி நேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதேபோல் மேலும் 418 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்து 840ஆகவும், பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 893ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 3 லட்சத்து 34 ஆயிரத்து 822 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 883ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,610ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 86 ஆயிரத்து 224ஆகவும்,பலி ஆயிரத்து 141 ஆகவும் (1141) அதிகரித்துள்ளது. டெல்லியில் பாதிப்பு 85 ஆயிரத்து 161ஆகவும், பலி 2,680ஆகவும் உயர்ந்துள்ளது.
Comments