இந்திய பெருங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

0 1292

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் இருநாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் போக்கை தொடர்ந்து, இந்திய கடல் பரப்பில் சீனாவின் செயல்களை கண்காணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, அமெரிக்க கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை போன்றவற்றுடன், இந்திய கடற்படை தனது ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது. 

சீனாவின் கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி ரோந்து செல்லக் கூடிய பகுதியில், கடந்த சனிக்கிழமையன்று இந்திய மற்றும் ஜப்பானின் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments