இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள புதிய வகை முகக் கவசம்

0 3151

இஸ்ரோ விஞ்ஞானிகள் இருவர் புதிய வகையான முகக் கவசத்தை வடிவமைத்துள்ளனர்.

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகளான வேணு பிரசாத், டாக்டர் அனிதா ஆகியோர் உருவாக்கியுள்ள இந்த முகக் கவசம் மூக்குப் பகுதியையும், வாய்ப் பகுதியையும் பிரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதன் மூலம் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில் அசுத்தமான சுவாசக்காற்று ஒன்று கலந்து பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், பார்வைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முகக் கவசத்தை தயாரிக்க 10 ரூபாய்க்குள் தான் செலவாகும் என்றும் இதற்கு தாங்கள் காப்புரிமையோ வணிக முத்திரையோ பெறாததால் இதனை தையற்கலைஞர்கள் எவர் வேண்டுமானாலும் தைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments