"தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை விட வேண்டாம்" -மத்திய அரசுக்கு மமதா பானர்ஜி கடிதம்

0 2200

தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாநிலங்களில் இருந்து மேற்குவங்கத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

விமானங்களையும் வாரம் ஒருமுறை மட்டும் அனுமதித்தால் போதும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்களும் புறநகர் மின்சார ரயில்களும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இயங்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments