வீடு வீடாகச் சென்று பரிசோதிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது கேரள அரசு

0 1477

கொரோனா பரவுவதைத் தடுக்க, வீடு வீடாக ஆய்வு நடத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று முதல் இந்த நடவடிக்கையை தொடங்கிய சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்ட வீடுகளில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், லேசான பாதிப்புடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி வருவதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடாமல் இருக்கவும் கொரோனாவைப் பரப்பாமல் இருக்கவும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒன்றேகால் லட்சம் பேரும் இதர மாநிலங்களில் இருந்து சுமார் இரண்டரை லட்சம் பேரும் கேரளாவுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் நோய்த் தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments