உபரி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை, பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய இசைவுக் கடிதம் கோரியும், பணி நிரவல் செய்யக் கோரியும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கை அனுப்பியுள்ளனர்.
உபரி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை, பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கைஇசைவுக்கடிதம் வழங்காவிட்டால், பணி நிரவல் செய்யாவிட்டால் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை, பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments