129 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பாம்பு... அஸ்ஸாமில் ஆச்சரியம்!

0 21048

த்ராகாண்ட் மாநிலம், டேராடூனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட பாம்பு இனம் ஒன்றை, 129 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தப் பாம்பு இனத்தின் பெயர் ‘‘Hebius pealii’. உள்ளூர் வழக்கில் அஸ்ஸாம் கீல்பேக் என்று அழைக்கப்படுகிறது. விஷமற்ற இந்தப் பாம்பு 50 - 60 செ.மீ நீளம் வளரக்கூடியது. 1891 - ம் ஆண்டு பிரிட்டிஷ் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய சாமுவேல் எட்வார்ட் பேல் என்பவர் தான் முதன் முதலில் இந்த அஸ்ஸாம் கீல்பேக் பாம்புகளை, சிபிசாகர் மாவட்டத்தில் பார்த்தார். அந்தப் பாம்புகளைப் பிடித்து அவற்றில் ஒன்றைக் கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்துக்கும் (ZSI ) மற்றொன்றை லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்துக்கும் அனுப்பி வைத்தார். அதற்குப் பிறகு இந்தப் பாம்புகள் யார் கண்களிலும் தென்படவில்லை. அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டது.

தற்போது 129 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 118 கி.மீ தொலைவில் அஸ்ஸாம் - அருணாச்சலப் பிரதேச எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாம்பைக் கண்டுபிடித்திருக்கும் இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த  தாஸ், ”நாங்கள் அதிஷ்டசாலி. அஸ்ஸாம் கீல்பேக் பாம்பைக் கண்டுபிடித்த பிறகு லண்டனிலிருந்து அதன் டி.என்.ஏ தகவலைப் பெற்று உறுதிசெய்துகொண்டோம். லண்டனில் இந்தப் பாம்பின் உயிரியல் மாதிரி சேகரிக்கப்பட்டதால் எங்களால் இந்தப் பாம்பினத்தை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. இல்லையெனில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டிருக்கும். இந்தப் பகுதிகளில் இந்தப் பாம்பு இனங்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments