அமேசானில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு..!

0 6800

உலகளாவிய வாடிக்கையாளர்களின் சேவைக்காக இந்தியாவில் இருபதாயிரம் பேரைப் பணியமர்த்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தில் பொருள் விற்பனை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இணையத்தளத்தில் பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர் சேவையை வலுப்படுத்தும் வகையில் தற்காலிக வேலைவாய்ப்பை வழங்க உள்ளது.

இந்தியாவில் ஐதராபாத், புனே, கோவை, நொய்டா, கொல்கத்தா ஜெய்ப்பூர் உள்ளிட்ட 11 நகரங்களில் ஆறு மாதக்காலத்துக்குத் தற்காலிகமாக 20 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருப்பதுடன், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஏதாவது ஒரு மொழியைச் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments