ரபேல் போர் விமானங்களின் முதலாவது பேட்ச் வரும் 27 ஆம் தேதி இந்தியா வந்தடையும் என தகவல்

0 5848

ரபேல் போர் விமானங்களின் முதலாவது பேட்ச் வரும் 27 ஆம் தேதி இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

4 அல்லது 6 ரபேல் விமானங்களை பிரான்சின் இஸ்ட்ரெஸ்-ல்  இருந்து இந்திய விமானிகள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வருவார்கள் என கூறப்படுகிறது.

இந்த விமானங்களில் பொருத்தப்படக்கூடிய மெட்டோர் , ஸ்கால்ப் ஏவுகணைகள் ஆகியன ஏற்கனவே இந்தியா வந்துள்ள நிலையில், ரபேல் விமானங்களும் வந்தவுடன், Golden Arrows என்ற தனி ஸ்குவாட்ரன் வரும் ஆகஸ்ட் மாதம் படையில் இணையும் தயார் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மொத்தம் 36 ரபேல் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்ததில் இந்த ஆண்டு 4 அல்லது 6 விமானங்கள் கிடைக்கும் எனவும் எஞ்சியவை 2022 க்குள் வந்து விடும் எனவும் கூறப்படுகிறது.

அம்பாலா தவிர்த்து, மேற்கு வங்கத்தில் உள்ள ஹாசிமாரா விமானப்படைத் தளத்திலும் ஒரு ரபேல் ஸ்குவாட்ரன் அமைய உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments