கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

0 1331

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, புதுவை, காரைக்கால் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 லிருந்து 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், ஜூலை 29 முதல் ஜூலை 3 ம் தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments