10 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ள நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனை

0 4711

உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனைகளில் ஒன்றான, டெல்லி சர்தார் பட்டேல் கோவிட் சிகிச்சை மையம், நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

10 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ள, இந்தியாவிலேயே மிகப்பெரியதான இந்த கொரோனா மருத்துவமனை, 2000 படுக்கைகளுடன் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

மீதமுள்ள 8 ஆயிரம் படுக்கைகள் புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளன. டெல்லி சத்தார்பூர் பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் அமிதஷாவும், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும் கடந்த சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தோ-திபெத் எல்லை காவல் படை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த மருத்துவமனை, டெல்லி மக்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சை மையம் உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments