தாகத்திற்க்கு தண்ணீர் குடிக்க வந்த குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொடூரமாக கொன்ற வீட்டு உரிமையாளர்

0 3060

தெலங்கானா மாநிலத்தில் தண்ணீர் குடிக்க வந்து வீட்டின் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குரங்கை, வீட்டின் உரிமையாளர் தூக்கில் தொங்கவிட்டு கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்மம் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவரது வீட்டிலுள்ள குடிநீர் தொட்டியில் நீர் அருந்த வந்த குரங்கு ஒன்று, தொட்டிக்குள்ளேயே தவறி விழுந்து தத்தளித்துள்ளது. இதனை பார்த்த வெங்கடேஸ்வர ராவ் அதனை காப்பாற்றுவதற்கு பதில், தூக்கு மாட்டி தொங்கவிட்டுள்ளான்.

துடிதுடித்தபடி தொங்கிய குரங்கை அங்கிருந்த நாய்களும் கடித்து குதறியுள்ளன. தொடர்ந்து பரிதாபமாக உயிரிழந்த குரங்கின் உடலை நாய்களுக்கு உணவாக வீசியெறிந்துள்ளான். குரங்குகள் முன்பு இவ்வாறு ஒரு குரங்கை கொன்றால், மற்ற குரங்குகள் பயந்து வீட்டிற்கு வராது என பக்கத்து வீட்டுக்காரர் கூறியதைக் கேட்டு இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments