போலீசாரை காலால் எட்டி உதைத்த முன்னாள் எம்.பி.

0 6192
முன்னாள் எம்.பி. அர்ஜுனனை போலீசார் நிறுத்தி விசாரித்தபோது தகராறு

சேலம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் எம்.பி. அர்ஜுனனை போலீசார் நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்ட நிலையில், அவர் காவல் உதவி ஆய்வாளரை காலால் உதைக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

சேலம் அழகாபுரத்தை சேர்ந்த அர்ஜுனன், தருமபுரி தொகுதி எம்பியாக ஒரு முறையும், தாரமங்கலம் தொகுதி எம்எல்ஏ ஆக இரண்டு முறையும் பதவி வகித்துள்ளார். நேற்று இரவு 7 மணியளவில், சேலம் அருகிலுள்ள கருப்பூர் பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடி வழியாக காரில் அர்ஜுனன் சென்றுள்ளார்.

அங்கு வாகன தணிக்கையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அர்ஜுனன் வந்த காரை நிறுத்தி எங்கு செல்கிறீர்கள்? அடையாள அட்டை காண்பியுங்கள் என கேட்டுள்ளனர்.

அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் அர்ஜூனன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், லேசான கைகலப்பு ஏற்பட்டது. அப்போது முன்னாள் எம்பி அர்ஜூனன் காவல் உதவி ஆய்வாளரை, எட்டி உதைக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அர்ஜூனன் 1980 முதல் 1985 வரை திமுக சார்பில் தருமபுரி எம்பியாகவும், 1989-1991 வரை அதிமுக ஜெ அணி எம்எல்ஏவாகவும் பிறகு 1991 முதல் 1996 வரை அதிமுக சார்பில் எம்எல்ஏவாகவும் இருந்தவர்.

மீண்டும் 2005ம் ஆண்டு திமுகவிற்கு வந்த அர்ஜுனன் பிறகு சில நாட்களிலேயே தேமுதிகவிற்கு சென்றுவிட்டதாகவும் தொடர்ந்து ஜெ தீபா அணியில் இருந்த அவர், டிடிவி தினகரன் அணிக்கும் சென்று இறுதியாக அதிமுகவில் இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments