இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு

0 2827
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,459 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 380 பேர் உயிரிழந்தனர்.

இத்துடன் சேர்த்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர், குணமடைந்தோர் போகத் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து பத்தாயிரத்து 120ஆக உள்ளது. இவர்கள் மருத்துவமனைகளிலும், தனிமை முகாம்களிலும், வீட்டுத் தனிமைக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 83 லட்சத்து 98 ஆயிரத்து 362 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 560 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 83 ஆயிரத்து 77 பேரும், தமிழகத்தில் 82 ஆயிரத்து 275 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் 70 ஆயிரத்து 622 பேரும், தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 659 பேரும், டெல்லியில் 27 ஆயிரத்து 847 பேரும் தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளாக உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments