அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர் மழையால் 23 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு

0 618

அஸ்ஸாமில் 23 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ளத்தினால் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தேமாஜி, பிஸ்வந்த், திப்ரூகர், பார்பேட்டா உள்ளிட்ட 23 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் 9 லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 69 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பிலான பயிர்கள் சேதமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பினால் மேலும் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments