தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து

0 1929

தமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் இன்று முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை- காட்பாடி, திருச்சி - செங்கல்பட்டு, திருச்சி- செங்கல்பட்டு மெயின், அரக்கோணம் - கோவை ஆகிய வழித்தடங்களில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜூலை 15-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ரயில்களில் பயணிக்க முன் பதிவு செய்தவர்களுக்கு முழு பணம் திரும்பி தரப்படும். இணையதளம் மூலம் பயணச்சீட்டு பெற்றவர்களுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் பணம் திரும்பி செலுத்தப்படும்.

கவுண்டர் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் ரயில் பயண தேதியில் இருந்து 6 மாதம் வரை டிக்கெட்டுக்கான முழு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments