இலங்கையில் பொதுமுடக்கம் முற்றிலும் நீக்கம்

0 2485
ஜூன் 1 முதல் கொரோனா இறப்புகள் இலங்கையில் பதிவாகவில்லை

இலங்கையில் இதுவரை அமலில் இருந்த பொதுமுடக்கம் முற்றிலும் நீக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் நாட்டின் பெரும்பாலான இடங்களில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டாலும் இரவில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 30-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதாலும், ஜூன் 1-ல் இருந்து புதிதாக உயிரிழப்பு இல்லை என்பதாலும் அங்கு பொதுமுடக்கம் முற்றிலும் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் எல்லைகளைத் திறக்கவும், அதே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதே மாதத்தில் தொடங்கவும் அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments