இந்தியாவில் கல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி கடன்

0 887
குறிப்பிட்ட 6 மாநிலங்களுக்காக ரூ.3,700 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த, உலக வங்கி 3,700 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள, சுமார் 15 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 25 கோடி மாணவர்களும், ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களும் இந்த திட்டத்தால் பயன் அடைவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கற்பித்தல், கற்றல் மற்றும் தேர்ச்சி விகிதங்களை மேம்படுத்துதல் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்த பெரிதும் உதவும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments