மக்கள் கொரோனாவிற்கு எதிரான முன்தடுப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும் - குடியரசு துணைத்தலைவர்

0 581

மக்கள் கொரோனா தொற்றை பார்த்து பீதியடையாமல் முன்தடுப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும் என, துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையாநாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், பொருளாதாரத்துக்கு ஊக்கம் கொடுக்க அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், ஒவ்வொருவரும் விதிமுறைகளைப் பின்பற்றி தேவையான தடுப்பு முயற்சிகளை எடுத்து, அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன் எப்போதும் கண்டிராத இந்தச் சுகாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தில், மக்கள் ஒற்றுமையாகப் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments