தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழைப் பொழிவு

0 2465

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்தது. தருமபுரியில் இன்று பரவலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கனமழை பெய்தது. மழையால் குறுவை நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.)) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரங்களில் காற்று, இடி, மின்னல் இன்றி, மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் - கம்பத்துராயன் மலைகளுக்கு இடையே மழை பெய்தபோது, அப்பகுதியே ரம்மியமாக காட்சியளித்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல்மலையனூர் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்ததால் தெருக்களில் பெருக்கெடுத்த மழை நீரில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஒரு வாரமாகவே விட்டு விட்டு பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டிவனம், மயிலம், உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டாரங்களிலும் மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments