டெல்லியில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை: அமித் ஷா

0 1356

டெல்லியில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் அத்தகைய நிலை இன்னும் வரவில்லை எனவும், ஆதலால் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

டெல்லியில் ஜூலை 31ம் தேதிக்குள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஐந்தரை லட்சமாக உயரும் எனவும், டெல்லியில் சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளிட்டவை இல்லை எனவும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அவருடைய கருத்து மக்களிடையே அச்சத்தை உருவாக்கி இருப்பதாகவும், சில மதிப்பீடுகள் அடிப்படையில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கலாம் என கூறிய அமித் ஷா, இதனால் டெல்லியிலிருந்து சிலர் வெளியேற தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

சிசோடியா கூறியது போல டெல்லியில் கொரோனா பாதிப்பு ஐந்தரை லட்சமாக உயராது என உறுதியாக தெரிவிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments