தேச பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

0 1263

தேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து எப்போது பேசுவீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் சீனா, இந்திய வீரர்கள் இடையேயான மோதல் சம்பவம் மற்றும் உயிரிழப்பை முன்வைத்து  மத்திய பாஜக கூட்டணி அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து  வருகின்றனர். லடாக்கில் 18 கிலோ மீட்டர் தூரம் சீனா ஊடுருவியிருப்பதாகவும், சீன ஆக்கிரமிப்பை மோடி கண்டிக்க வேண்டுமென கபில் சிபல் வலியுறுத்தியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம்  உரை நிகழ்த்திய மோடி,  லடாக் எல்லையில்  சீன படையினருக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், தேச பாதுகாப்பு குறித்து எப்போது  பேசுவீர்கள் என மோடிக்கு  கேள்வியெழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments