ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் இரங்கல்

0 11308

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

போலீசார் தாக்கியதால் தான் இருவரும் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இருவரின் மரணத்திற்கு நீதி கேட்டு அனைத்து தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், ஜெயராஜ் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments