மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-க்குப் பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு

0 3597
கொரோனா தொற்று பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் ஜூன் முப்பதாம் தேதிக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கொரோனா பரவல் அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதால் ஜூன் முப்பதாம் தேதிக்குப் பின் ஊரடங்கு தளர்த்தப்படாது எனத் தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள் தளரும்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்கும் என்பதால், படிப்படியாகத் தளர்த்தப்படும் எனத் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் அரசின் அணுகுமுறையும், கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments