பல்லாங்குழி, பரம்பதம் விளையாட்டுகளை புதிய வடிவில் அறிமுகப்படுத்துக - பிரதமர் மோடி

0 3595
ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கும் இளைய தலைமுறையினரை மீட்கலாம்

பல்லாங்குழி, பரமபதம் போன்ற நமது பாரம்பரியமான விளையாட்டுகளை புதிய வடிவங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் பல புதிய தொழில் முயற்சிகளை துவக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரலில் இதை அவர் தெரிவித்தார். தென்னிந்தியாவிலும், தெற்கு ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ள இந்த விளையாட்டுக்களை புதிய தலைமுறையினரை கவரும் வகையில் மேம்படுத்தலாம் என்ற மோடி, இதனால் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கும் இளைய தலைமுறையினரை மீட்கவும் முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டுக்களை வைத்து துவக்கப்படும் தொழில் முயற்சிகளால், அதற்கான பொருள்களை தயாரிப்பவர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களுக்கு  நல்ல பலன் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments