சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் - கமல்ஹாசன்

0 2917

சாத்தான்குளம் தந்தை - மகன் சிறை மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ரத்தம் சொட்ட சொட்ட தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதக குற்றம் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருவரின் உயிரிழப்பும் நம்மில் எவருக்கும், என்ன வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால் கைதிகளை, காவல் நிலையத்தில் இருந்து, சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா? அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும்? 2 அப்பாவிகளின் குருதி படிந்த காவல்துறையை சுத்தம் செய்ய அரசு என்ன செய்ய போகிறது என கமல்ஹாசன் அடுக்கடுக்காக கேள்வியெழுப்பியுள்ளார்.

பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நிதியுதவியை விட நீதி தேவை எனக் கூறியுள்ள கமல்ஹாசன், காவல் துறையின் அத்துமீறல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து, பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுக்கும் அரசு, அரச பயங்கரவாதத்தை அனுமதித்து, ஆதரித்து, வளர்த்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments