மும்பையில் 3 மாதங்களுக்குப் பின் முடிதிருத்தகங்கள் மீண்டும் திறப்பு

0 2316

மும்பையில் மூன்று மாதங்களுக்குப் பின் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பையில், குணமடைந்தோர், உயிரிழந்தோர் போக 27ஆயிரம் பேர் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர்.

இந்நிலையில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் 3 மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் வெப்பநிலையை அறிந்து அதைப் பதிவேட்டில் பதிந்துகொள்கின்றனர்.

முடிவெட்டும் தொழிலாளர்கள் கையுறைகள், முகக்கவசம். உடல் காப்புக் கவசம் ஆகியவற்றை அணிந்துகொண்டு பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் தனித் துண்டுகள் பயன்படுத்துவதுடன் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கருவிகளைக் கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments