பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்படவில்லை

0 1094

21 நாள்களாக பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள், இன்று விலையை உயர்த்தவில்லை. 

 கொரோனா ஊரடங்கால் பெட்ரோல் டீசல் விலையை  நாள்தோறும் மாற்றியமைக்கும் நடவடிக்கையை 82 நாள்களாக நிறுத்தி வைத்திருந்த எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 7ம் தேதி முதல் அந்நடவடிக்கையை மீண்டும் தொடங்கின.

இதனால் சென்னையில் 6ம் தேதி   75 ரூபாய் 54 காசாக இருந்த பெட்ரோல் விலை படிப்படியாக 21 நாட்களில்  8 ரூபாய் 5 காசுகள் உயர்ந்தன. இதேபோல் 6ம் தேதி 68 ரூபாய் 22 காசாக இருந்த டீசல் விலை படிப்படியாக 21 நாட்களில் 9 ரூபாய் 39 காசுகள் அதிகரித்தன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவில்லை. இதனால் சென்னையில் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 ரூபாய் 59 காசாகவும், டீசல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 61 காசாகவும் விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments