இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.28 லட்சத்தை தாண்டியது

0 969

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்தையும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 19 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மேலும் 410 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 95ஆக உயர்ந்துள்ளது

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 3 ஆயிரத்து 51 பேர் சிகிச்சை பெறும் நிலையில், அத்தொற்றிலிருந்து 3 லட்சத்து 9 ஆயிரத்து 713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 133ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 273ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2ஆவது இடத்தில் உள்ள டெல்லியில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை டெல்லியில் 80 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2,558 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

3ம் இடத்திலுள்ள தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 25ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments