ஊரடங்கு காலத்தில் பள்ளிமாணவர்களுக்கு உணவுப்படி வழங்க அரசு முடிவு

0 14010

பள்ளி மாணவர்களுக்கு உணவுப்படி வழங்குவதற்காக வங்கிக்கணக்கு விவரங்களைச் சேகரிக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 17ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு உணவுப்படி வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளிகள் மூடப்பட்ட நாளில் இருந்து, மீண்டும் திறக்கப்படும் வரையுள்ள நாட்களைக் கணக்கிட்டு உணவுப்படி வழங்கப்படவுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதுள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் பெயர், வயது, முகவரி, வங்கிக்கணக்கு எண் ஆகிய விவரங்களைச் சேகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments