செர்பிய பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் உலினுக்கு கொரோனா

0 838

செர்பிய பாதுகாப்பு அமைச்சர் அலெக்சான்டர் உலினுக்கு (Aleksandar Vulin) கொரோனா உறுதியாகியுள்ளது.

செர்பிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், அறிகுறிகள் இல்லாதபோதிலும் கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர்  சுயதனிமைபடுத்தி கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அமைச்சரின் செயலர்களுக்கு  நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

செர்பியாவில் மே மாதமும், ஜூன் மாத தொடக்கத்திலும் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நாள்தோறும் 100ஆக பாதிப்பு பதிவாகி வருகிறது. இதுவரை 13 ஆயிரத்தி 565 பேருக்கு அந்நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments