ஊரடங்கு நீட்டிப்பா ? தமிழகத்தை பின்பற்ற புதுச்சேரி அரசு முடிவு

0 3324

தமிழகத்தைப் பின்பற்றி, ஜூன் 30 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா, அல்லது வேண்டாமா ? என்பதை முடிவு செய்ய இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஜூலை 2 -ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வீடியோ மூலம் வெளியிட்ட ஒரு பேட்டியில் அவர், இந்த தகவலை தெரிவித்தார்.

புதுச்சேரியில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் 40 மருத்துவர்களும், 60 செவிலியர்களும் புதிதாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், விழிப்புடன் இருந்து தங் களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments