’கொரோனாவால் இறந்தவர் உடல் ஜே.சி.பி- யில் எடுத்து செல்லப்பட்ட அவலம்!- அதிர்ந்து போன ஆந்திரா

0 4943

ந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்துபோனவரின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி, ஜே.சி.பி இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீகாகுளத்தில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். அவரது உடலை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, அடக்கம் செய்வதற்கு ஜே.சி.பி இயந்திரத்தில் கொண்டு சென்றிருக்கிறார்கள். உடல்களைக் கொண்டு சென்றவர்கள் மட்டும் பாதுகாப்பாக PPE கவசங்களை அணிந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த வீடியோவைப் பார்த்த, ஆந்திரப் பிரதேச முதல் அமைச்சர் அலுவலக அதிகாரிகள் உடனே ஸ்ரீகாகுள மாவட்ட ஆட்சித்தலைவரைத் தொடர்பு கொண்டு, "இது மனிதத்தன்மையற்ற செயல்" என்று கண்டித்தனர். , கொரோனா இறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்திய ஸ  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாகுளம் நகராட்சி ஆணையர் பி.நாகேந்திர குமார் மற்றும் சுகாதார அதிகாரி என்.ராஜீவை பணியிடை நீக்கம் செய்துள்ளார் இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி டுவிட்டரில், "கொரோனா நோயால் இறந்தவர் உடலை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ஜேசிபி இயந்திரத்தில் கொண்டு சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கொரோனா நோயால் இறந்தவர்களை மதிப்புடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டியது நமது கடமை" என்று கருத்து கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பு ஜூன் 24 - ம் தேதி கொரோனாவால் இறந்த பெண்மணியின் உடல் டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments