தேனியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அதிகரித்துக் காணப்படும் மக்கள் நடமாட்டம்

0 3266

தேனியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகரித்தே காணப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மதுரையைத் தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் 6 நகராட்சிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும், கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடைகள் அடைக்கபட்டிருந்தாலும் வாகனப் போக்குவரத்த்தும் மக்கள் நடமாட்டமும் அதிகரித்தே காணப்பட்டது. ஆங்காங்கே போலீசார் வாகனங்களில் வருவோரை மடக்கி அறிவுரை கூறியும் அபராதம் விதித்தும் அனுப்பி வருகின்றனர். பழனிசெட்டிபட்டி ,அன்னஞ்சி ,அரண்மனை புதூர் பகுதிகளில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments