இந்தியாவில் 6 நாட்களில் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்ந்த கொரோனா தொற்று

0 1045

இந்தியாவில் ஆறே நாள்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்ந்திருக்கிறது. நாட்டில் 17 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதே இதுவரை ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பாக கருதப்பட்டது.

இந்நிலையில் முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் முதல்முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் மகாராஷ்டிராவில் முந்தைய உயிரிழப்பான 84 பேரையும் சேர்த்து மேலும் 175 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 4 நாள்களாக 400க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் அந்த எண்ணிக்கை 400க்கும் குறைவாக 384ஆக பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments