பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு

0 4645

பாகிஸ்தானில் ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு அந்நாட்டு ரூபாய் (Pakistani Rupees) மதிப்பில் 25 ரூபாய் 58 காசுகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால், பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 ரூபாய் 52 காசுகளில் இருந்து 100 ரூபாய் 10 காசாக அதிகரித்துள்ளது. இதேபோல் சாதாரண டீசலின் விலை லிட்டருக்கு 17 ரூபாய் 84 காசுகளும், ஹை ஸ்பீட் டீசலின் விலை லிட்டருக்கு 21 ரூபாய் 31 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் 98 காசுகளாகவும், ஹை ஸ்பீட் டீசல் விலை 101 ரூபாய் 26 காசாகவும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வருவதால், அதற்கேற்ப விலை உயர்த்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 1 ரூபாய் என்பது இந்திய மதிப்பில் 45 காசு என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments