செய்யூர் திமுக உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா

0 1489

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யூர் எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவரது குடும்பத்தினர், ஓட்டுநர் உள்ளிட்டோரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எம்.எல்.ஏ அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments