நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1439
நாட்டில் கொரோனா பாதிப்பு 5.08 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாள்தோறும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் மேல் கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 18 ஆயிரத்து 552 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 384 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 97 ஆயிரத்து 387 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து 2 லட்சத்து 95 ஆயிரத்து 881 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 765ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,106ஆகவும் அதிகரித்துள்ளது.

2ம் இடத்திலுள்ள டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 240ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,492ஆகவும் உயர்ந்துள்ளது.

3ம் இடத்திலுள்ள தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622ஆக அதிகரித்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 957ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments