எல்லையில் சீனாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார்

0 2174
பதிலடி கொடுக்க தயார் - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ராணுவத் தளபதி விளக்கம்

சீனப் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள், அதிநவீன பீரங்கிகள் போன்றவற்றுடன் 12 ஆயிரம் வீரர்கள் லடாக் எல்லையில் தயார் நிலையில் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. சுகோய் விமானங்கள், மிக் 29 போர் விமானங்கள் எல்லையில் வட்டமிட்டு வருகின்றன. சீனா மறுபடியும் தாக்குதல் தொடுக்கலாம் என்று உளவுத்துறை தகவல்களால் இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்கத் தயார் நிலையில் உள்ளனர்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு நிலவரத்தையும் இருநாடுகளின் உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையையும் கண்காணிக்க அப்பகுதிக்கு பயணித்த ராணுவத் தளபதி எம்.எம். நரவனே  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கை டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது இந்தியப் படைகளின் தயார்நிலை வியூகத்தைக் குறித்து நரவனே விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments