டெல்லியில் ஜூலை 31-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

0 1431
பாடத்திட்டங்களை 50 சதவிகிதம் குறைக்கும் திட்டம் பற்றியும் ஆலோசனை

டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை அவர்  வெளியிட்டார்.  மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவிகிதம் அளவுக்கு குறைக்கும் திட்டம் பற்றியும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக மனிஷ் சிசோடியா தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது புதிய சூழலுக்கு தகுந்தாற்போல் தயாராக  திட்டம் உருவாக்கப்படும் என்றார். எனவே மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள உதவும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்றும் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments