உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது

0 1562
நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53.57 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு கோடியை நெருங்குகிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47 ஆயிரத்திற்கும்,மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

அதிகபட்சமாக பிரேசில் புதிதாக 47 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், அங்கு ஒரே நாளில் 1055 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

ரஷ்யாவில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும், சிலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் புதியதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உலக அளவில் நோய்த்தொற்று உறுதியானவர்களில், 4 லட்சத்து 97 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொரோனா உறுதியானவர்களில் 53 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments