சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை முழு ஊரடங்கு

0 88929
காய்கறி, மளிகை உட்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்

சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை முழு ஊரடங்கு எந்தவிதத் தளர்வும் இல்லாமல் அமல்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகள் போன்றவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எந்த விதத் தளர்வும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்றும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளையும் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கு எந்த விதத் தளர்வும் இல்லாமல் அமல்படுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments