ஊரடங்கு தளர்வா..? நீட்டிப்பா..? மத்திய அரசு விளக்கம்

0 36514
தமிழ்நாடு, மே.வங்கம், ஜார்க்கண்ட், தெலுங்கானாவில் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

நாடு தழுவிய ஊரடங்கை கடந்த ஜூன் முதல் தேதியில் இருந்து மத்திய அரசு பலவகையான தளர்வுகளுடன் நீட்டித்துள்ள நிலையில் அது முடிவடைய இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ளன. ஜூலை முதல் தேதிககுப் பின்னர் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்வுகளை அதிகப்படுத்துவதா என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் பாதிப்பு அதிகமுடைய மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்கியுள்ளன. சில மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் அதிகமான பாதிப்புடைய மகாராஷ்ட்ராவும் டெல்லியும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் வியாபாரிகள் தாங்களாகவே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். பேகம் பஜார் உள்ளிட்ட முக்கிய வணிகப்பகுதிகளை அடுத்த பத்து நாட்களுக்கு மூடுவதாக ஹைதராபாத் கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments