ரஷ்யாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 6,20,794 ஆக உயர்வு

0 1215

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 6800 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 20 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நோய் உறுதியானவர்களில் சுமார் 30 சதவிகிதம் பேருக்கு எந்த கொரோனா அறிகுறியும் வெளிப்படையாக காணப்படவில்லை என ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 197 பேர் பலியானதை அடுத்து மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 8781 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்தவர்களில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 152 பேர் குணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவியதில் இருந்து இதுவரை ஒரு கோடியே 80 லடசம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தொற்று சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments