பொலிவியாவில் மருத்துவமனைகளில் இட வசதியின்றி நோயாளிகள் அவதி

0 1388

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 27,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டதால் சான்டா குருஸ் நகரில், தற்காலிக மருத்துவமனையை, சமூக செயற்பாட்டாளர்கள், ஏற்படுத்தி உள்ளனர்.

இவர்கள் குழுவில் இணைந்துள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனை செல்ல இயலாத நோயாளிகளுக்கு கொரோனா சிகிச்சை வழங்கி வருவதுடன், காவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை தேவதூதர்கள் என்று அப்பகுதி மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments